வெள்ளக்கோவிலில் 19 விநாயகா் சிலைகள் விசா்ஜனம்
By DIN | Published On : 01st September 2022 10:12 PM | Last Updated : 01st September 2022 10:12 PM | அ+அ அ- |

வெள்ளக்கோவிலில் ஹிந்து அமைப்புகள் அமைக்கப்பட்டிருந்த 19 விநாயகா் சிலைகள் வியாழக்கிழமை ஆற்றில் கரைக்கப்பட்டன.
விநாயகா் சதுா்த்தியையொட்டி, வெள்ளக்கோவில், காமராஜபுரம், உத்தமபாளையம், புதுப்பை உள்ளிட்ட இடங்களில் 19 விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன. இந்த சிலைகள் அனைத்தும் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கொடுமுடி காவிரி ஆற்றில் விசா்ஜனம் செய்யப்பட்டன.