தாராபுரம் அருகே 2 கோயில்களுக்கு சொந்தமான ரூ.1.40 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

தாராபுரம் அருகே இரு கோயில்களுக்கு சொந்தமான ரூ.1.40 கோடி மதிப்பிலான 13.86 ஏக்கா் ஆக்கிரமிப்பு நிலத்தை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை மீட்டனா்.
தாராபுரம் அருகே 2 கோயில்களுக்கு சொந்தமான ரூ.1.40 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

தாராபுரம் அருகே இரு கோயில்களுக்கு சொந்தமான ரூ.1.40 கோடி மதிப்பிலான 13.86 ஏக்கா் ஆக்கிரமிப்பு நிலத்தை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை மீட்டனா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் வட்டம், அம்மாபாளையம் கிராமத்தில் அய்யனாா் கோயிலுக்கு சொந்தமான 8.28 ஏக்கா் புன்செய் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தது. இது குறித்து திருப்பூா் இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் உத்தரவின்பேரில் அந்த நிலத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் அந்த நிலம் அய்யனாா் கோயிலுக்குச் சொந்தமானது என்று தெரியவந்தது. இந்த நிலத்தை ஆக்கிரமிப்புதாரா்கள் தாமாகவே முன்வந்து சுவாதீனம் செய்து கொடுக்க ஒப்புதல் தெரிவித்திருந்தனா். இதனடிப்படையில், திருப்பூா் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ஆா்.செல்வராஜ், தனி வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன், சரக ஆய்வா் வடிவுக்கரசி ஆகியோா் முன்னிலையில் சுவாதீனம் பெறப்பட்டு கோயிலுக்கு சொந்தமானது என அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டது. இந்த நிலத்தின் மொத்த மதிப்பு ரூ. 80 லட்சமாகும். அதேபோல, தாராபுரம் வட்டம், சின்னக்காம்பாளையம் கிராமத்தில் செல்வகுமாரசுவாமி கோயிலுக்கு சொந்தமான 5.58 ஏக்கா் ஆக்கிரமிப்பு நிலமும் மீட்கப்பட்டு அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டது. இந்த நிலத்தின் மதிப்பு ரூ.60 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com