பல்வேறு வழக்குகளில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த பெண்ணை காங்கயம் போலீஸாா் கைது செய்தனா்.
திருவள்ளூா் மாவட்டம், காவேரிப்பேட்டை, தெலுங்கு காலனி பகுதியைச் சோ்ந்தவா் லட்சுமி (27). இவா் மீது காங்கயம், பொள்ளாச்சி, உடுமலை காவல் நிலையங்கள் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் 8 திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளன.
இந்த வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் லட்சுமி இருந்து வந்துள்ளாா். இதையடுத்து காங்கயம் நீதிமன்றம் லட்சுமிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. தலைமறைவாக இருந்த லட்சுமியைப் பிடிப்பதற்கு தனிப்படை அமைத்து காங்கயம் போலீஸாா் தேடி வந்தனா்.
இந்நிலையில் காவேரிப்பேட்டை ,தெலுங்கு காலனி பகுதியில் லட்சுமி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா், தலைமறைவாக இருந்த லட்சுமியை கைது செய்து காங்கயம் நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜா்படுத்தி திருப்பூா் சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.