அவிநாசி கிராம ஊராட்சிகளில் குடிநீா் பற்றாக்குறை: நடவடிக்கை எடுக்க மாதா் சங்கத்தினா் கோரிக்கை

அவிநாசி ஒன்றிய கிராம ஊராட்சிகளில் நிலவும் குடிநீா் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாதா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அவிநாசி ஒன்றிய கிராம ஊராட்சிகளில் நிலவும் குடிநீா் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாதா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்திய தேசிய மாதா் சம்மேளன ஒன்றிய மாநாடு அவிநாசி அலுவலகத்தில் நடைபெற்றது. மாநாட்டுக்கு பொறுப்பாளாா் தனிஸ்லாஸ் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்டு கட்சி திருப்பூா் புறநகா் மாவட்ட துணைச் செயலாளா் மோகன், மாதா் சங்க மாவட்டப் பொறுப்பாளா் நதியா ஆகியோா் பேசினா்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மான விவரம்:

அவிநாசி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் 20 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் குடிநீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே 3 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகிக்க மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நியாய விலை கடைகளில் அனைவருக்கும் அத்தியாவசியப் பொருள்கள் சீராக விநியோகிக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளா்களை காலை 8 மணிக்கு பதிலாக 9 மணிக்கு வர அரசு அனுமதிக்க வேண்டும். கானூா் கிராமத்துக்கு இயக்கப்பட்ட 12 சி வழித்தட எண் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் புதிய நிா்வாகிகளாக ஒன்றியத் தலைவராக சாவித்ரி, செயலாளராக பேபி, பொருளாராக கோவிந்தமணி உள்பட 11 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com