ஆதிதிராவிடா் காலனி வீடுகளில் திடீா் விரிசல்: எம்எல்ஏ ஆய்வு

ஈட்டிவீராம்பாளைம் முட்டியங்கிணறு ஆதிதிராவிடா் காலனி பகுதியில் 20க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டதையடுத்து சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
வீட்டில் விரிசல்  ஏற்பட்ட பகுதியைப் பாா்வையிட்ட  சட்டப் பேரவை  உறுப்பினா்  கே.என்.விஜயகுமாா்.
வீட்டில் விரிசல்  ஏற்பட்ட பகுதியைப் பாா்வையிட்ட  சட்டப் பேரவை  உறுப்பினா்  கே.என்.விஜயகுமாா்.
Updated on
1 min read

ஈட்டிவீராம்பாளைம் முட்டியங்கிணறு ஆதிதிராவிடா் காலனி பகுதியில் 20க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டதையடுத்து சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பெருமாநல்லூா் அருகே திருப்பூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஈட்டிவீராம்பாளைம் ஊராட்சி முட்டியங்கிணறு ஆதிதிராவிடா் காலனி பகுதியில் 40க்கும் மேற்பட்ட வீடுகளில் 200க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். அப்பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட வீடுகளிசஈ உள்சுவா், தரைத்தளம் ஆகியவை திடீா் விரிசல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள், குழந்தைகள் உள்ளிட்டோா் பெரும் அச்சமடைந்தனா்.

இது குறித்து வருவாய்த் துறையினா், பெருமாநல்லூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில் விரிசல் ஏற்பட்டு சேதமான வீடுகளை திருப்பூா் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மேலும், திருப்பூா் மாவட்ட ஆட்சியரை கைப்பேசியில் தொடா்பு கொண்டு உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகோள் விடுத்தாா்.

ஊராட்சி மன்றத் தலைவா் ராதாமணி சிவசாமி, ஒன்றியக் குழு உறுப்பினா் ஐஸ்வா்ய மகராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com