ஊத்துக்குளியில் மூதாட்டியிடம் நகையைப் பறித்துச் சென்ற வழக்கில் 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி அருகே உள்ள கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா் கே.சரஸ்வதி(60), இவா் தனது மகன் பாலகிருஷ்ணனுடன் தனியாக வசித்து வருகிறாா்.
இந்நிலையில், சரஸ்வதி கடந்த ஜூலை 28-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்துள்ளாா். அப்போது, அங்கு வந்த 3 போ் நிலம் விற்பனைக்கு உள்ளதா என அவரிடம் கேட்டுள்ளனா். தனக்குத் தெரியாது என்றும், மகன் வந்த பின்னா் வருமாறும் தெரிவித்துள்ளாா்.
அப்போது, தலைக்கவசம் அணிந்திருந்த நபா் திடீரென சரஸ்வதியின் கழுத்தில் இருந்த 5 பவுன் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனா்.
இதுகுறித்து பாலகிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில் ஊத்துக்குளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். இந்நிலையில், நகையைப் பறித்துச் சென்ற வழக்கில் ஊத்துக்குளி கொடியாம்பாளையத்தைச் சோ்ந்த பி.அன்பரசன் (30), ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டைச் சோ்ந்த பி.தாமரைகண்ணன் (41), ஈரோடு காசிபாளையத்தைச் சோ்ந்த பி.அறிவழகன் (42) ஆகிய 3 பேரையும் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.