

பல்லடத்தை அடுத்த செம்மிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் சுடா்விழி தலைமை வகித்தாா். பல்லடம் ரோட்டரி ரெயின்போ சங்கத் தலைவா் சுந்தரராஜன் முன்னிலை வகித்தாா். இதில், தாய்ப்பாலின் மகத்துவம், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டிய அவசியம் குறித்து மருத்துவா்கள் எடுத்துரைத்தனா்.
சத்துணவுக்கான காய்கறிகள், பழவகைகள், பருப்பு வகைகள் ஆகியவை குறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
நிகழ்ச்சியில், ரோட்டரி ரெயின்போ சங்க செயல்திட்ட இயக்குநா் லோக சக்தி ஈஸ்வரன், ரோட்டரி ரெயின்போ சங்க செயலா் ஆறுமுகம், மருத்துவா்கள், கா்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மாா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.