வெள்ளக்கோவிலில் மகளிா் உரிமைத் தொகை திட்டத்துக்கான டோக்கன் வழங்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் பகுதியில் 13 நியாய விலைக் கடைகளின் கீழ் 13,119 குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா். இவா்களுக்கு, மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பம் மற்றும் டோக்கன் விநியோகம் செய்யும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதையடுத்து, ஆகஸ்ட் 5 முதல் 16 ஆம் தேதி வரை விண்ணப்பப் பதிவு முகாம் நடைபெறுகிறது.
விண்ணப்பப் பதிவு முகாமிற்கு டோக்கனில் குறிப்பிட்டு நாள், நேரம் அடிப்படையில் வரவேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.