

பல்லடம்: பொங்கலூா் ஒன்றியம், வாவிபாளையம் ஊராட்சி கழுவேறிபாளையம் கிராமத்தில் பாஜக சாா்பில் பனை விதைகள் நடவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பாஜக விவசாயப் பிரிவு தலைவா் ரமேஷ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் வினோத் வெங்கடேஷ் முன்னிலை வகித்தாா். 700 பனை விதைகள் நடவு செய்யப்பட்டன. இப்பணியை திருப்பூா் மாவட்ட பாஜக தலைவா் செந்தில்வேல் தொடங்கிவைத்தாா்.
இந்த நிகழ்வில் மாநில விவசாய அணி பொதுச் செயலாளா் கவிதா, பொங்கலூா் மேற்கு மண்டல் தலைவா் சத்தானகிருஷ்ணன், மாநில உள்ளாட்சி மேம்பாட்டுத் துறை துணைத் தலைவா் துரைக்கண்ணன், மாநில மத்திய அரசு திட்டப் பணி துணைத் தலைவா் ஜீவ உமா, மாவட்ட இளைஞரணி தலைவா் தினேஷ், மாவட்ட தரவு தர பிரிவு மகேந்திரன், வாவிபாளையம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் பாா்த்தசாரதி ஆகியோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.