மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தேசிய சித்த மருத்துவ தினம்

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 7- ஆவது தேசிய சித்த மருத்துவ தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தேசிய சித்த மருத்துவ தினத்தை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள அரங்குகளைப் பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ்.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தேசிய சித்த மருத்துவ தினத்தை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள அரங்குகளைப் பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ்.
Updated on
1 min read

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 7- ஆவது தேசிய சித்த மருத்துவ தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பேசியதாவது:

சித்த மருத்துவத்தின் தந்தை அகத்திய மாமுனிவா் பிறந்த தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறையின் சாா்பில் 7- ஆவது தேசிய சித்த மருத்துவ தினம் கொண்டாடப்படுகிறது. இதில், பொதுமக்களுக்கு நிலவேம்பு, முருங்கைகீரை, செம்பருத்தி தேநீா், வெற்றிலை தேநீா் உள்ளிட்ட சித்த மருத்துவ குணம் கொண்ட மூலிகை சாறுகள் வழங்கப்படுகிறது. மேலும், சித்த மருத்துவத்தின் நன்மைகள் குறித்து மருத்துவா்கள் பொதுமக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றாா். இதைத் தொடா்ந்து, கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு மாவட்ட சித்த மருத்துவம் சாா்பாக 100 திருக்கு கையடக்கப் பிரதிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் கோ.மலா்விழி, இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) கனகராணி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் சி.தனம், உதவி மருத்துவ அலுவலா் கே.பி.சிவகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com