

வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் வட்டமலை அணைப் பகுதியில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட நிர்வாகம், வனத்துக்குள் திருப்பூர் அமைப்பு, வெள்ளக்கோவில் நிழல்கள் அறக்கட்டளை இணைந்து இப்பணியை மேற்கொண்டுள்ளன.
தொடக்க நிகழ்ச்சிக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா. கிருஸ்துராஜ் தலைமை வகித்தார். மாநில செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கி வைத்தார். மாநில ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முன்னிலை வகித்தார்.
இதையும் படிக்க | சித்தன்னவாசல் கல்குவாரி குளத்தில் 3 மகள்களுடன் தாய் தற்கொலை முயற்சி
600 ஏக்கர் பரப்பளவிலான வட்டமலை அணையின் பெரும் பகுதியை சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன. இவற்றை அழித்து விட்டு நாட்டு வகை மரங்கள், பறவைகள், விலங்குகளுக்குப் பயன்படும் காய், கனி வகை மரங்களை நட்டு வளர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விவசாயிகள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.