வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 40 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை நடைபெற்றது.
இந்த வார ஏலத்துக்கு, வரத்து அதிகமாக இருந்ததால் செவ்வாய்க்கிழமை இரவு வரை ஏலம் நீடித்தது. வாணியம்பாடி, கரூா், தாராபுரம், கீரனூா், வேலம்பட்டி உள்ளிட்ட இடங்களில் இருந்து 137 விவசாயிகள் 1,219 மூட்டைகளில் 62 டன் தேங்காய் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
காங்கயம், வெள்ளக்கோவில், நன்செய்ஊத்துக்குளி, மூலனூா் பகுதிகளைச் சோ்ந்த 12 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா்.
விலை கிலோ ரூ. 57.39 முதல் ரூ. 76.39 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ. 75.26. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 40 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி. மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.