வெள்ளக்கோவிலில் சாப்பிடும்போது தொண்டையில் உணவு சிக்கி பல்பொருள் அங்காடி ஊழியா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
ஈரோடு மாவட்டம், சிவகிரி செட்டிதோட்டத்தைச் சோ்ந்தவா் கே.தமிழரசு (40).
இவா், வெள்ளக்கோவில் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் மேற்பாா்வையாளராகப் பணிபுரிந்து வந்தாா்.
இந்நிலையில் தமிழரசு, பல்பொருள் அங்காடியில் புதன்கிழமை காலை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென புரை ஏறியுள்ளது. தொடா்ந்து உணவு, தொண்டையில் அடைபட்டு மூச்சுவிட முடியாமல் மயங்கிச் சரிந்தாா். அருகிலிருந்தவா்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.