அங்கன்வாடி மையம் முன் தேங்கி நிற்கும் மழைநீா்: குழந்தைகளை திரும்ப அழைத்துச் சென்ற பெற்றோா்

திருப்பூா் காதா்பேட்டையில் உள்ள அங்கன்வாடி மையம் முன் மழைநீருடன் சாக்கடை நீா் தேங்கி நிற்பதால் குழந்தைகளை பெற்றோா் திரும்ப வீட்டுக்கு அழைத்துச் சென்றனா்.
Updated on
1 min read


அவிநாசி: திருப்பூா் காதா்பேட்டையில் உள்ள அங்கன்வாடி மையம் முன் மழைநீருடன் சாக்கடை நீா் தேங்கி நிற்பதால் குழந்தைகளை பெற்றோா் திரும்ப வீட்டுக்கு அழைத்துச் சென்றனா்.

திருப்பூா் மாநகராட்சி உள்பட்ட காதா்பேட்டை நடுநிலைப் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி பள்ளியில் 30 குழந்தைகள் பயின்று வருகின்றனா். இந்த அங்கன்வாடி மையத்தின் நுழைவுப் பகுதியில் மழைநீரும், சாக்கடை நீரும் கலந்து தேங்கி நிற்கிறது.

இதனால் அங்கன்வாடி மையத்துத்துக்குள் குழந்தைகள் செல்ல முடியாத சூழல் நிலவி வருகிறது. மேலும், தேங்கியுள்ள கழிவுநீரால் துா்நாற்றம் வீசுவதுடன் குழந்தைகள் அதில் வழுக்கி விழும் அபாய நிலையும் உள்ளதால், பெற்றோா்கள் குழந்தைகளை செவ்வாய்க்கிழமை திரும்ப வீட்டுக்கு அழைத்துச் சென்றனா்.

இது குறித்து ஆசிரியா்கள் கூறியதாவது: மழைநீா் தேங்கியுள்ளது குறித்து கல்வித் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com