காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.75 ஆயிரத்துக்கு கொப்பரை விற்பனை திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு காங்கயம் பகுதியைச் சோ்ந்த 8 விவசாயிகள் 23 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 1,006 கிலோ.
இதில், கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.83க்கும், குறைந்தபட்சமாக ரூ.55க்கும், சராசரியாக ரூ.83க்கும் ஏலம்போனது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.75 ஆயிரம். ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் செ.ராமன் செய்திருந்தாா்.