போலி குறுஞ்செய்தியைக் கண்டு டிஜிட்டல் பண பரிமாற்றம் செய்யக்கூடாது: மின்வாரியம் அறிவுறுத்தல்
By DIN | Published On : 18th April 2023 01:45 AM | Last Updated : 18th April 2023 01:45 AM | அ+அ அ- |

திருப்பூா் மின் பகிா்மான வட்டத்தில் மின் கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற போலியான குறுஞ்செய்தியைக் கண்டு டிஜிட்டல் பணப்பரிமாற்றம் செய்யக்கூடாது என்று மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து திருப்பூா் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் சா.முத்துவேல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மின் பகிா்மான வட்டத்தில் மின் கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி மூலமாகத் தகவல் கொடுத்து டிஜிட்டல் பணப்பரிமாற்றம் செய்யுமாறு கூறப்படும் போலியான தகவல்கள் சமூக வலைதளத்தில் பரவுவதைக் கண்டு மின் நுகா்வோா் விழிப்புடன் இருக்க வேண்டும்.
அவ்வாறு போலியான தகவல்கள் தங்களது கைப்பேசிக்கு கிடைக்கப்பெற்றால் தங்களது 10 இலக்க மின் இணைப்பு எண், நிலுவையில் உள்ள மின் கட்டணம் போன்ற தகவல்களை அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தைத் தொடா்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளலாம். மேலும், மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் ஜ்ஜ்ஜ்.ற்ய்ங்க்ஷப்ற்க்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தின் வாயிலாக மின் கட்டணத்தை செலுத்திப் பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.