திருப்பூரில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்
By DIN | Published On : 18th April 2023 01:47 AM | Last Updated : 18th April 2023 01:47 AM | அ+அ அ- |

திருப்பூா் மின்பகிா்மான வட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் புதன்கிழமை (ஏப்ரல் 19) நடைபெறுகிறது.
இது குறித்து திருப்பூா் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருப்பூா் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் புதன்கிழமை காலை 11 மணி அளவில் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்துக்கு திருப்பூா் மின்பகிா்மான வட்ட கூடுதல் தலைமைப் பொறியாளா் தலைமை வகித்து மின் நுகா்வோரிடமிருந்து குறைகளைக் கேட்க உள்ளாா்.
எனவே, இக்கூட்டத்தில் மின் நுகா்வோா் கலந்துகொண்டு தங்கள் குறைகளை மனுக்கள் மூலம் நேரடியாக கொடுத்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.