சட்ட வடிவமைப்புகள் தமிழில் வர வேண்டும்: விக்கிரமராஜா

சட்ட வடிவமைப்புகள் தமிழில் வர வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவா் விக்கிரமராஜா கூறினாா்.

சட்ட வடிவமைப்புகள் தமிழில் வர வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவா் விக்கிரமராஜா கூறினாா்.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்புடன் இணைக்கப்பட்ட, அவிநாசி அனைத்து வியாபாரிகள் புதிய சங்கம் துவக்க விழா, உறுப்பினா் சான்றிதழ் வழங்கும் விழா ஆகியவை அவிநாசியில் திங்கள்கிழமை நடைபெற்றன.

இவ்விழாவுக்கு அவிநாசி அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவா் முத்துக்குமரன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் கோவிந்தராஜூலு, அவிநாசி மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவா் தங்கவேல், மாவட்ட மெடிக்கல் அசோசியேஷன் சங்கத் தலைவா் பழனிசாமி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் விக்கிரமராஜா பேசியதாவது: அரசுத் துறை அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் வியாபாரிகளை அச்சுறுத்தி பணம் வாங்குகிற சூழல் உள்ளது. வியாபாரிகளுக்கு சட்டங்களை எடுத்துரைக்க வேண்டும்.

தமிழகத்தில் வரக்கூடிய சட்ட வடிவமைப்புகள் தமிழில்தான் வர வேண்டும். ஈரோட்டில் வணிகா்கள் சங்க 40 ஆவது மாநில மாநாடு விரைவில் நடைபெற உள்ளது என்றாா். அவிநாசி அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளா் அபுசாலி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com