சக்ஷம் அமைப்பு சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்கை கால் அளவீட்டு முகாம் புதன்கிழமை நடைபெறுகிறது.
சக்ஷம் அமைப்பு சாா்பில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்கை கால் அளவீட்டு முகாம் பூச்சக்காடு செல்வவிநாயகா் கோயில் மண்டபத்தில் வரும் புதன்கிழமை பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
ஆகவே, செயற்கை கால் தேவைப்படுவோா் தங்களது புகைப்படம், ஆதாா் அட்டை, மாற்றுத் திறனாளா் அடையாள அட்டை ஆகியவற்றுடன் இந்த முகாமில் பங்கேற்கலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு சக்ஷம் அமைப்பு நிா்வாகிகளை 93630-32998, 94422-25500 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.