வாகன விபத்து: பெயிண்டா் பலி
By DIN | Published On : 18th April 2023 01:46 AM | Last Updated : 18th April 2023 01:46 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவில் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் பெயிண்டா் உயிரிழந்தாா்.
வெள்ளக்கோவில் காங்கயம் சாலை எல்கேசி நகரைச் சோ்ந்தவா் கண்ணன் (38), பெயிண்டா். இவா் தனது மகள் சூரியபிரபா (14) உடன் இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை கடை வீதிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளாா்.
காங்கயம் சாலை அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் கண்ணன் வாகனத்தின் மீது மோதியது. இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
படுகாயமடைந்த சூரியபிரபா வெள்ளக்கோவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.