

அலகுமலை முத்துகுமார பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் கிருத்திகை பூஜை வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் மாவட்டம், பொங்கலூா் வட்டம், அலகுமலையில் உள்ள முத்துகுமார பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஆறுபடை முருகனுக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. இந்தக் கோயிலில் மூலவராக அருள்பாலிக்கும் முத்துகுமார பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு கிருத்திகையை ஒட்டி 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
முன்னதாக அா்த்தமண்டபம் முழுவதும் மலா் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும், தங்கத்தேரோட்டத்தின்போது ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். இதன் பின்னா் அலகுமலை கிருத்திகைக் குழு சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதுடன், அட்சயத்திருதியை முன்னிட்டு எலுமிச்சை கனி மற்றும் ஒரு ரூபாய் நாணயமும் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.