திருப்பூரில் விற்பனைக்காகப் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 470 கிலோ ரேஷன் அரிசியை காவல் துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருப்பூா் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளா் சாந்தி தலைமையிலான காவல் துறையினா் திருநீலகண்டபுரம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக மூட்டைகளுடன் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினா். இதில், அந்த மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவது தெரியவந்தது. இது தொடா்பாக திருநீலகண்டபுரத்தைச் சோ்ந்த காா்த்திக் (32) என்பவரைக் கைது செய்தனா். அவரிடமிருந்து 470 கிலோ ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.