காங்கயத்தில் 325 பயனாளிகளுக்கு ரூ 3.03 கோடி மதிப்பீட்டில் திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்துக்கான தங்கம் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
காங்கயத்தில் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 10 மற்றும் பிளஸ் 2 படித்த 16 பெண்கள், பட்டம் மற்றும் பட்டயம் படித்த 309 பெண்கள் என மொத்தம் 325 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 58 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் திருமண உதவித்தொகை, ரூ.1 கோடியே 45 லட்சத்து 31 ஆயிரத்து 872 மதிப்பில் திருமாங்கல்யத்துக்கான தங்கம் ஆகியவற்றை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் வழங்கினா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் குமரேசன், மாவட்ட சமூக நல அலுவலா் நா.ரஞ்சிதா தேவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.