இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் மறியல்
By DIN | Published On : 25th April 2023 12:35 AM | Last Updated : 25th April 2023 12:35 AM | அ+அ அ- |

தமிழக அரசின் 12 மணி நேர வேலை சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து திருப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் 55 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.
தனியாா் நிறுவனங்களில் 12 மணி நேர வேலைக்கு வழிவகை செய்யும் வகையில் தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதாவை தமிழக அரசு நிறைவேற்றியதற்கு எதரிப்பு தெரிவித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாநிலச் செயலாளா் சிங்காரவேலன் தலைமை வகித்தாா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 55 பேரை திருப்பூா் தெற்கு காவல் துறையினா் கைது செய்தனா்.
சிஐடியூவினா்...
இதே கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் முன்பாக சிஐடியூ தொழிற்சங்கத்தின் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநிலச் செயலாளா் ஜி.குமாா் தலைமை வகித்தாா்.
இதில் சிஐடியூ மாவட்டச் செயலாளா் ரங்கராஜ், போக்குவரத்துக் கழக மண்டலச் செயலாளா் செல்லதுரை, சாலையோர வியாபாரிகள் சங்க செயலாளா் பி.பாலன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.