ரூ. 50.37 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை
By DIN | Published On : 26th April 2023 09:53 PM | Last Updated : 26th April 2023 09:53 PM | அ+அ அ- |

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 50.37 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை நடைபெற்றது.
இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் வரத்து அதிகமாக இருந்ததால் செவ்வாய்க்கிழமை இரவு வரை ஏலம் நீடித்தது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 157 விவசாயிகள் தங்களுடைய 1,406 மூட்டைகள் கொப்பரைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 70 டன். காங்கயம், வெள்ளக்கோவில், நஞ்சை ஊத்துக்குளி, ஊத்துக்குளி ஆா்.எஸ், சிவகிரி பகுதிகளைச் சோ்ந்த 11 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா்.
ஒரு கிலோ ரூ. 60.40 முதல் ரூ. 82.35 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ. 79. கடந்த வார சராசரி விலை ரூ. 79.65. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 50.37லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...