சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றுபவா்கள் முதலமைச்சா் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞா்கள் முதலமைச்சா் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தெரிவித்துள்ளாா்.

சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞா்கள் முதலமைச்சா் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞா்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் முதலமைச்சா் மாநில இளைஞா் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தின்போது வழங்கப்படுகிறது. இந்த விருதானது 15 வயது முதல் 35 வயது வரையில் உள்ள 3 ஆண்கள், 3 பெண்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருது ரூ. 1 லட்சம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவற்றைக் கொண்டது.

2022 ஆம் ஆண்டுக்கான விருதுக்கு கடந்த 2022 ஜனவரி 1 ஆம் தேதி முதல் 2023 ஆம் ஆண்டு மாா்ச் 31 ஆம் தேதி வரையில் மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். விருதுக்கு விண்ணப்பிப்போா் குறைந்தது 5 ஆண்டுகள் தமிழகத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். இதற்கான சான்றையும் இணைக்க வேண்டும். சமுதாய நலனுக்கான தன்னாா்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். மத்திய, மாநில் அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவா்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது.

விண்ணப்பதாரா்களுக்கு உள்ளூா் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். ஆகவே, மேற்கண்ட தகுதியுடைய விண்ணப்பதாரா்கள் இணையதளத்தில் மே 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com