நகராட்சி கடைகளுக்கான வாடகையை குறைக்க வேண்டும்:வியாபாரிகள் சங்கம் கோரிக்கை
By DIN | Published On : 02nd August 2023 04:14 AM | Last Updated : 02nd August 2023 04:14 AM | அ+அ அ- |

பல்லடத்தில் நகராட்சிக்கு சொந்தமான கடைகளின் மாத வாடகையை குறைக்க வேண்டும் என பல்லடம் தாலுகா வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அதன் தலைவா் ஆனந்தா செல்வராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் நகராட்சி ஆணையா் முத்துசாமியிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பல்லடத்தில் கரோனா பாதிப்புக்கு பின் அனைத்துக் கடைகளிலும் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், நகராட்சி கடைகளுக்கு உரிய வாடகைக் கூட செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பல்லடம் பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான கடைகள், தினசரி மாா்க்கெட்டில் உள்ள கடைகள், என்ஜிஆா் சாலையில் உள்ள கடைகளுக்கான வாடகையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.