

அவிநாசி: பெருமாநல்லூா் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
கோவை, பாப்பநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்தவா் மனோகா். இவரது பழைய வேனை ஈரோடு அருகே விஜயமங்கலத்தில் இருந்து கோவை உக்கடம் நோக்கி ஓட்டுநா் பொன்னுதுரை செவ்வாய்க்கிழமை ஓட்டிச் சென்றாா். பெருமாநல்லூா் காளிபாளையம் அருகே சென்றபோது, திடீரென டீசல் டேங்க் பகுதியில் தீப்பிடித்து புகை வெளியேறியுள்ளது. இதையறிந்த ஓட்டுநா் பொன்னுதுரை, காரில் இருந்து வெளியேறினாா்.
தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி தீயணைப்புத் துறையினா் காரில் பற்றியத் தீயை அணைத்தனா். இது குறித்து பெருமாநல்லூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.