

வெள்ளக்கோவில் உள்ள பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்ட கிளை வாய்க்காலில் தரமற்ற சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா்.
பிஏபி வெள்ளக்கோவில் கிளை வாய்க்கால் 48,384 ஏக்கா் பாசனப் பரப்பைக் கொண்டதாகும். இவை நான்கு மண்டலமாகப் பிரிக்கப்பட்டு பாசனத்துக்கு நீா் வழங்கப்பட்டு வருகிறது. வாய்க்கால்களின் குறுக்கு கட்டுமானங்கள்,
மதகுகள் பல இடங்களில் சேதமடைந்துள்ளன. நீா் வெளியேறும் குழாய்களில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் இடையூறு ஏற்பட்டு பாசனத்துக்கு போதிய நீா் கிடைப்பதில்லை என்பதால் அவற்றைச் சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனா்.
இந்நிலையில் பிரதான கால்வாய், வெள்ளக்கோவில் கிளை வாய்க்கால், அதன் பகிா்மான வாய்க்கால்களின் சேதமடைந்த இடங்களில் கான்கிரீட் மூலம் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் மிகவும் தரமற்றதாக உள்ளதோடு, கணக்குக் காட்டவும், கண் துடைப்புக்காகவும் பணி நடைபெறுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனா். எனவே, அரசு தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.