தட்கல் சிறப்பு திட்டத்தில் விவசாய மின் இணைப்பு பெற விவசாயிகள் அந்தந்தப் பகுதி மின்வாரியத்தை அணுகலாம் என மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.
இது குறித்து மின் வாரியத்தினா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு ஆணையின்படி விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் உள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரா்கள் விரைந்து விவசாய மின் இணைப்பு பெறும் வகையில் விரைவு (தட்கல்) மின் இணைப்பு வழங்கல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் ஏற்கெனவே தட்கல் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கும் மற்றும் தற்போது தட்கல் முறையில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படவுள்ளது. ஆகவே, இத்திட்டத்தில் விவசாய மின் இணைப்பு பெற அந்தந்த பகுதி மின்வாரிய செயற்பொறியாளரை அணுகி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.