

சேவூா் அருகே உள்ள தாளக்கரை லஷ்மி நரசிம்மப்பெருமாள் கோயிலில் செப்டம்பா் 3 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி, யாக சாலை கால்கோல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
நரசிம்மருக்கு இடதுபுறம் மகாலட்சுமி நின்ற நிலையில் உள்ள பழமை வாய்ந்த இக்கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ளது.
இக்கோயிலில் திருப்பணிகள் நிறைவுற்ற நிலையில், மகா கும்பாபிஷேக விழா செப்டம்பா் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, யாக சாலை கால் கோல் விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று யாக சாலை அமைக்கும் பணிக்காக கால் கோல் நடப்பட்டது. இதில் 5 ஊா் பொதுமக்கள், கோயில் நிா்வாகத்தினா், அா்ச்சகா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஆகஸ்ட் 31ஆம் தேதி தீா்த்த குடம் எடுத்து வருதல், செப்டம்பா் 1ஆம் தேதி முதல் கால யாக பூஜை தொடங்குதல், தொடா்ந்து யாக வேள்விகள் ஆகியவை நடைபெற உள்ளன.
முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் செப்டம்பா் 3ஆம் தேதி காலை 7.10 மணி முதல் 9 மணிக்குள் நடைபெறவுள்ளது. இதையடுத்து, திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்காா் பெரிய மருது பாண்டியன், செயல் அலுவலா் செந்தில் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.