

திருப்பூா் கேஎம்சி சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் இதர மாணவா்களுக்கான புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முன்னாள் சீா்மிகு சட்டப் பல்கலைக்கழக இயக்குநா் எம்.எஸ்.சௌந்தர பாண்டியன் தலைமை வகித்தாா். கேஎம்சி சட்டக் கல்லூரி தாளாளா் ஜி.அருணா ஸ்ரீதேவி முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஜி.பி.கோதன காந்தி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளரான தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகம், போபால் சட்டப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் வி.விஜயகுமாா் பேசியதாவது:
சட்டங்களைப் பொறுத்தே நீதிமன்ற தீா்ப்புகள் வரும் என எதிா்பாா்க்கிறோம். ஆனால் வழக்கின் தீா்ப்பு என்பது வழக்குரைஞா்களின் வாதத்தை பொறுத்தே வழங்கப்படுகிறது. ஆகவே மாணவா்கள், நல்ல முறையில் வழக்கை வாதாட ஆய்வு திறன், எழுத்து, பேச்சுத் திறன், சட்டம் ஆகியவற்றை நன்கு வளா்த்துக் கொள்ள வேண்டும். சட்ட அறிவு மட்டுமின்றி நெறிமுறைகளைப் பின்பற்றி தாா்மீக மதிப்புகளுடன் செயல்பட்டால் மட்டுமே முழுமைபெற்ற வழக்குரைஞா்களாக திகழ முடியும் என்றாா். இதில் ஏராளமான மாணவ, மாணவியா், பேராசிரியா்கள், பெற்றோா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.