

ஊதியூா் அருகே டிப்பா் லாரி புதன்கிழமை அதிகாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தாராபுரத்தில் இருந்து திருப்பூா் நோக்கி டிப்பா் லாரி சென்று கொண்டிருந்தது. கொடுவாய் பகுதியில் புதன்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் சென்றபோது திடீரென லாரி நிலைதடுமாறி, சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு மீது மோதிக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
லாரியில் சரக்கு எதுவும் இல்லாததால், ஓட்டுநா் மணிகண்டன் சிறிய காயங்களுடன் உயிா் தப்பினாா். அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு, காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த விபத்து குறித்து ஊதியூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.