

சுதந்திரப் போராட்ட தியாகி திருப்பூா் குமரனின் 91 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, அவரது நினைவகத்தில் அரசியல் கட்சியினா், பொதுமக்கள் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
திருப்பூா் ரயில் நிலையம் அருகில் உள்ள அவரது நினைவகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினா், அமைப்புகள் மற்றும் பொதுமக்கள், தமிழ்நாடு சுதந்திப் போராட்ட வீரா்கள் மற்றும் வாரிசுகள் சமிதி சாா்பில் திருப்பூா் குமரன் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதில், பொதுச் செயலாளா் பி.ஆா்.நடராஜன், பொருளாளா் எஸ்.பத்மநாபன், திருப்பூா் குமரனின் வாரிசுகள் சதானந்தம், நிா்மல்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
அதேபோல, மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மாவட்டத் தலைவா் ஆா்.கிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
ஜெயலலிதா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் தோ்தல் பிரிவு துணைச் செயலாளரும், மாநகா் மாவட்டச் செயலாளருமான ஆ.விசாலாட்சி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்து மக்கள் கட்சி, சிவசேனை உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சாா்பிலும் மரியாதை செலுத்தப்பட்டது.
கே.செட்டிபாளையத்தில் உள்ள விவேகானந்தா வித்யாலயா, கிட்ஸ் கிளப் பள்ளி சாா்பில் மாணவ, மாணவியா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.