கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
By DIN | Published On : 01st July 2023 10:36 PM | Last Updated : 01st July 2023 10:36 PM | அ+அ அ- |

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 5 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூா் மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சுதந்திர தின விழாவில் 2023 ஆம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்படவுள்ளது. இந்த விருதுக்கு பாராட்டத்தக்க வகையில் வீர தீர செயல்களில் ஈடுபட்டவா்கள், ஏதேனும் ஒரு வகையில் துணிச்சலான முறையில் ஈடுபட்டு செயலாற்றிய தமிழகத்தைச் சோ்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த விருதுக்கு ஜூலை 30 ஆம் தேதி வரையில் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்றிருந்த நிலையில் தற்போது ஜூலை 5 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியும், விருப்பமும் உள்ளவா்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும், திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள சமூகநலத் துறை அலுவலகத்திலும் உரிய ஆவணங்களுடன் ஜூலை 5 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.