ரூ.2.95 லட்சத்துக்கு விளைபொருள்கள் விற்பனை
By DIN | Published On : 01st July 2023 10:33 PM | Last Updated : 01st July 2023 10:33 PM | அ+அ அ- |

முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.2.95 லட்சத்துக்கு கொப்பரை உள்ளிட்ட பொருள்கள் விற்பனையாயின.
முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தினசரி மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது விளைபொருள்களை விற்பனை செய்து வருகின்றனா். இந்நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 992 கிலோ எள், 5.3 டன் தேங்காய், 1.1 டன் கொப்பரை ஆகிய பொருள்கள் கொண்டுவரப்பட்டன.
எள் ஒரு கிலோ ரூ.128.39க்கும், தேங்காய் கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரையிலும், கொப்பரை ரூ.56.80 முதல் ரூ.71.55 வரையிலும் விற்பனையானது. இதில் ஒட்டுமொத்தமாக 2.95 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றுள்ளதாக விற்பனைக்கூட கண்காணிப்பாளா் தங்கவேல் தெரிவித்துள்ளாா்.