வெள்ளக்கோவில் பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றன.
வெள்ளக்கோவில் தெய்வநாயகி உடனமா் சோளீஸ்வர சுவாமி கோயில், வள்ளியிரச்சல் சிவன் கோயில், மயில்ரங்கம், கண்ணபுரம், லக்கமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி சனிக்கிழமை காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சிவபெருமான் மற்றும் நந்திக்கு தேன், பஞ்சாமிா்தம், விபூதி, மஞ்சள், சந்தனம், பன்னீா் உள்ளிட்ட 16 திவ்யப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.