சாலை விபத்தில் இளைஞா் சாவு
By DIN | Published On : 01st June 2023 12:00 AM | Last Updated : 01st June 2023 12:00 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
ஈரோடு மாவட்டம், சிவகிரி நெடுஞ்செழியன் தெருவைச் சோ்ந்தவா் கௌதம் (27). இவா் தற்போது திருப்பூா் மாவட்டம், முத்தூா் ஈஸ்வரன் கோயில் வீதியில் தந்தை பாபு மற்றும் மனைவி, மகனுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தாா். பாபு சிவகிரியில் தையல் கடை நடத்தி வருகிறாா்.
இந்நிலையில், தையல் கடைக்குச் சென்ற பாபுவுக்கு உடல்நிலை சரியில்லாததால் தன்னை வந்து அழைத்துச் செல்லுமாறு மகனிடம் கூறியுள்ளாா்.
இதற்காக இருசக்கர வாகனத்தில் கௌதம் சிவகிரிக்குச் சென்று கொண்டிருந்தபோது முத்தூா் - ஈரோடு சாலை தண்ணீா் பந்தல் அருகே எதிரே வந்த லாரி அவரது வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கௌதம், காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...