ரூ. 6.77 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
By DIN | Published On : 01st June 2023 12:00 AM | Last Updated : 01st June 2023 12:00 AM | அ+அ அ- |

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ. 6.77 லட்சத்துக்கு பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு, மொத்தம் 384 பருத்தி மூட்டைகள் வரத்து இருந்தது. இதில், ஆா்.சி.எச். பி.டி.ரகப்பருத்தி குவிண்டால் ரூ.6,000 முதல் ரூ. 7,322 வரையிலும், கொட்டுரக (மட்டரக) பருத்தி குவிண்டால் ரூ.2,000 முதல் ரூ.3,000 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 6 லட்சத்து 77 ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...