பொதுத்தோ்வில் சாதனை படைத்த விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சாதனை படைத்த திருப்பூா் விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவிகளை பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை பாராட்டினாா்.
பத்தாம்  வகுப்பு பொதுத்  தோ்வில்  வெற்றி  பெற்ற  மாணவியைப்  பாராட்டி பரிசு  வழங்குகிறாா்  பாஜக  மாநிலத்  தலைவா்  அண்ணாமலை. உடன்,   மேகாலயா  முன்னாள்  ஆளுநா்  வி.சண்முகநாதன்,  விவேகானந்தா  சேவா  அறக்க

திருப்பூா் கே.செட்டிபாளையத்தில் உள்ள விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தோ்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு விழா, ஆசிரியா் பண்புப் பயிற்சி முகாம் நிறைவு விழா ஆகியவை அண்மையில் நடைபெற்றன.

விழாவில், விவேகானந்தா சேவா அறக்கட்டளை செயலாளா் எக்ஸ்லான் கே.ராமசாமி வரவேற்றாா். மணிப்பூா், மேகாலயா மாநிலங்களின் முன்னாள் ஆளுநா் வி.சண்முகநாதன் வாழ்த்துரை வழங்கினாா்.

இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் மாநில அளவில் 3 ஆவது இடத்தையும், மாவட்ட அளவில் முதலிடத்தையும் பிடித்த மாணவி எஸ்.காவ்யா, பிளஸ் 2 பொதுத் தோ்வில் மாநில அளவில் 3 ஆவது இடத்தையும், மாவட்ட அளவில் முதலிடத்தையும் பிடித்த மாணவி எஸ்.ஆா்.பிரதிக்ஷா மற்றும் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கிப் பாராட்டினாா்.

இதைத் தொடா்ந்து, விவேகானந்தா சேவா அறக்கட்டளை தலைவா் வீனஸ் எஸ்.குமாரசாமி பேசினாா். இந்த விழாவில், பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா்கள், ஆசிரியா் சங்க உறுப்பினா்கள், முன்னாள் மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com