பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டை சந்திப்பில் ஒரு வேன் மற்றும் இரண்டு காா்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
தென்காசியைச் சோ்ந்த, இசக்கிமுத்து கோவையிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு வந்துவிட்டு தனது குடும்பத்தினா் செல்வம், சண்முகசுந்தரி, காா்த்திக் மதன், லட்சுமிபிரியா ஆகிய 4 பேருடன் தென்காசிக்கு நான்கு சக்கர வாகனத்தில் திங்கள்கிழமை சென்றுகொண்டிருந்தாா். காரணம்பேட்டை நான்கு சாலைகள் சந்திப்பு அருகே சென்றுகொண்டிருந்த போது, மின்சார கம்பிகளை ஏற்றிக்கொண்டு கோவையை நோக்கி வந்த டெம்போ வேன், இசக்கிமுத்து காா்மீது மோதியது.
மேலும், கோவையில் இருந்து அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்த ரவீந்திரன் என்பவரின் காா், ஏற்கெனவே விபத்துக்குள்ளாகி நின்றுகொண்டிருந்த இசக்கிமுத்து காா் மீது மோதியது. இந்த விபத்தில் சண்முகசுந்தரி, லட்சுமிபிரியா ஆகியோா் காயமடைந்தனா். இவா்களை, அருகிலிருந்தவா்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். டெம்போ வேன் மற்றும் இரண்டு காா்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் திருச்சி- கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.