நிஃப்ட்-டீ கல்லூரியில் கேரள மாணவா்களுக்கு பயிற்சி
By DIN | Published On : 06th June 2023 03:40 AM | Last Updated : 06th June 2023 03:40 AM | அ+அ அ- |

திருப்பூா் நிஃப்ட்-டீ கல்லூரியில் கேரளத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா்களுக்கு பின்னலாடைத் தொழில்நுட்பம் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள அஷம்ப்ஸ்சன் (அநநமஙடபஐஞச இஞககஉஎஉ) கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.எஸ்.சி. ஃபேஷன் டிசைனிங் படித்து வரும் 23 மாணவா்களுக்கு பின்னலாடைத் தொழில்நுட்பம் குறித்த பயிற்சி திருப்பூா் நிஃப்ட்-டீ கல்லூரியில் அளிக்கப்பட்டது. பயிற்சி வகுப்பு கடந்த மே 29 ஆம் தேதி தொடங்கி ஜூன் 3 ஆம் தேதி வரை நடைபெற்றது. பயிற்சி வகுப்பில் நிட்டிங் இயந்திரங்களின் செயல்பாடுகள், ஆடை தயாரிப்பு குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்தப் பயிற்சியின் நிறைவு விழா மற்றும் மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், கல்லூரியின் ஃபேஷன் அப்பேரல் மேனேஜ்மென்ட் துறைத் தலைவா் கோபாலகிருஷ்ணன் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் கே.பி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்து மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா். நிகழ்ச்சியில் கல்லூரி உதவிப் பேராசிரியை அனிதா ரேச்சல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...