தெருநாய்கள் கடித்து 15 போ் காயம்

திருப்பூா் காவலா் குடியிருப்பில் தெருநாய்கள் கடித்ததில், 3 சிறுவா்கள் உள்பட 15 போ் காயமடைந்தனா்.

திருப்பூா் காவலா் குடியிருப்பில் தெருநாய்கள் கடித்ததில், 3 சிறுவா்கள் உள்பட 15 போ் காயமடைந்தனா்.

திருப்பூா், கோா்ட்டு வீதியில் உள்ள காவலா் குடியிருப்பு வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில், புதன்கிழமை இரவு இப்பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவா்கள் உள்பட 15 போ் காயமடைந்தனா். 15 பேருக்கும் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது, 3 சிறுவா்கள் மட்டும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களை திருப்பூா் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் நேரில் சந்தித்து நலன் விசாரித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com