மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவில் காலிப்பணியிடம்:தகுதியானவா்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
By DIN | Published On : 09th June 2023 12:00 AM | Last Updated : 09th June 2023 12:00 AM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) பாலு தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவில் லீக் எய்ட் டிபென்ஸ் கவுன்சில் சிஸ்டம் பிரிவில் அலுவலக உதவியாளா் 3 போ், தலா ஒரு வரவேற்பாளா் மற்றும் தட்டச்சா், அலுவலக பணியாளா் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இப்பணியிடங்களை தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதற்கு தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம்.
மேற்கண்ட பணியிடங்களுக்கான தகுதி, தோ்வுமுறை, விண்ணப்பம், விண்ணப்பிப்பதற்கான கால அவசகாம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் திருப்பூா் மாவட்ட நீதிமன்ற இணையதளத்தை பாா்வையிட்டு தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...