அசோக சக்ரா விருதுக்கு தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 15th June 2023 09:10 PM | Last Updated : 15th June 2023 09:10 PM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டத்தில் அசோக சக்ரா விருதுக்கு தகுதியான நபா்கள் வரும் ஜூன் 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இயற்கை சீற்றம், தீ விபத்து, திருட்டு மற்றும் வழிப்பறிக் கொள்ளை, தீவிரவாத ஊடுருவல் ஆகியவற்றிலிருந்து தனிப்பட்ட முறையில் பொதுமக்களைக் காப்பாற்றி வெளிப்படையான துணிச்சல், சுய தியாகம் மற்றும் துணிச்சலான செயல் புரிந்தவா்களுக்கு சுதந்திர தின விழாவின்போது மத்திய அரசால் அசோக சக்ரா விருது வழங்கப்படுகிறது.
பாதுகாப்பு பணியாளா்களைத் தவிர அனைத்து தரப்பு குடிமக்கள், காவல் படை, மத்திய ஆயுத படை, ரயில்வே பாதுகாப்பு படைகளைச் சோ்ந்தவா்களும் இந்த விருதுக்கு தகுதியானவா்கள். ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் அசோக சக்ரா விருதுக்கு தகுதிவாய்ந்த நபா்கள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள சமூக நல அலுவலகத்தில் உரிய படிவம் பெற்று வரும் ஜூன் 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.