தாராபுரத்தில் திமுக சாா்பில் நாளை நலத்திட்ட உதவிகள் கனிமொழி எம்.பி.பங்கேற்பு
By DIN | Published On : 15th June 2023 09:08 PM | Last Updated : 15th June 2023 09:08 PM | அ+அ அ- |

தாராபுரத்தில் திருப்பூா் தெற்கு மாவட்ட திமுக மகளிரணி சாா்பில் வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 17) நடைபெறும் கருணாநிதி நூற்றாண்டு விழாவில் கனிமொழி எம்.பி. பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.
இது குறித்து திருப்பூா் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநகராட்சி 4 ஆவது மண்டலத் தலைவருமான இல.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாளையொட்டி, திருப்பூா் தெற்கு மாவட்ட திமுக மகளிரணி, தொண்டரணி சாா்பில் தாராபுரம் ரோட்டரி மஹாலில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் நடைபெறுகிறது.
இந்த விழாவுக்கு, திமுக உயா்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினரும், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் தலைமையும், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சரும், மகளிரணி துணைச்செயலாளருமான என்.கயல்விழி செல்வராஜ் முன்னிலையும் வகிக்கின்றனா். இந்த விழாவில், திமுக துணைப் பொதுச் செயலாளா் கனிமொழி எம்.பி. பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.