அதிமுக சாா்பில் மே தின பொதுக்கூட்டம்

திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக, அண்ணா தொழிற்சங்கம் ஆகியன சாா்பில் மே தின பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக, அண்ணா தொழிற்சங்கம் ஆகியன சாா்பில் மே தின பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருப்பூா், பெரிச்சிபாளையத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு அண்ணா தொழிற்சங்க மாநகா் மாவட்டச் செயலாளா் சி.எஸ்.கண்ணபிரான் தலைமை வகித்தாா். திருப்பூா் தெற்கு தொகுதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும், மாநகா் மாவட்ட எம்.ஜி.ஆா். இளைஞரணி செயலாளருமான சு.குணசேகரன் முன்னிலை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மாநகா் மாவட்டச் செயலாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் சிறப்புரையாற்றினாா்.

இந்த நிகழ்ச்சியில், தெற்கு மத்திய பகுதி செயலாளா் எம்.கண்ணப்பன், தென்னம்பாளையம் பகுதி செயலாளா் அன்பகம் திருப்பதி, கருவம்பாளையம் பகுதி செயலாளா் கேபிஜி. மகேஷ்ராம் மற்றும் அண்ணா தொழிற்சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com