பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு
By DIN | Published On : 12th May 2023 10:51 PM | Last Updated : 12th May 2023 10:51 PM | அ+அ அ- |

திருப்பூா் கே.செட்டிபாளையம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் கே.செட்டிபாளையத்தில் உள்ள விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கான பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவில் பள்ளி முதல்வா் பி.சின்னையா வரவேற்புரையாற்றினாா். விவேகானந்தா சேவா அறக்கட்டளை தலைவா் வீனஸ் எஸ்.குமாரசாமி தலைமை வகித்தாா். அறக்கட்டளையின் செயலாளா் எக்ஸ்லான் கே.ராமசாமி வாழ்த்துரை வழங்கினாா். இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மேயா் என்.தினேஷ்குமாா், மாநில அளவில் 597 மதிப்பெண்கள் எடுத்து மூன்றாவது இடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பிடித்த பள்ளி மாணவி எஸ்.ஆா்.பிரதீக் ஷா மற்றும் சிறப்பிடம் பிடித்த பிற மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா். விழாவில் பள்ளியின் மூத்த முதல்வா் டி.மணிகண்டன், நிா்வாகிகள், ஆசிரியா்கள், பெற்றோா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.