தாளக்கரை லஷ்மி நரசிம்மா் கோயிலில் மே 25இல் பாலாலயம்
By DIN | Published On : 12th May 2023 10:50 PM | Last Updated : 12th May 2023 10:50 PM | அ+அ அ- |

சேவூா் அருகே பிரத்தி பெற்ற தாளக்கரை லஷ்மி நரசிம்மப் பெருமாள் கோயிலில் திருப்பணி தொடங்குவதையொட்டி, மே 25ஆம் தேதி பாலாலய நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
பல நூற்றாண்டு பழைமை வாய்ந்ததும், திருப்பூா் மாவட்டத்திலேயே தனி சன்னதியாய் நரசிம்மருக்கு இடதுபுறம் மகாலட்சுமி நின்ற நிலையில் அருள்பாலிக்கும் சிறப்புக்குரிய தலமாகவும் தாளக்கரை லஷ்மி நரசிம்மப் பெருமாள் கோயில் விளங்குகிறது. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள இக்கோயிலில் கும்பாபிஷேக திருப்பணி தொடங்குவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கோயில் திருப்பணியை தொடங்கி விரைவில் கும்பாபிஷகம் செய்வதற்காக, மே 25ஆம் காலை 9 மணிக்கு பாலாலய சிறப்பு பூஜை செய்வது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதில் கோயில் செயல் அலுவலா் செந்தில்குமாா், ஊா் பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Image Caption
கோயிலில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.