பாண்டியன் நகா் ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்கக் கோரி மனு
By DIN | Published On : 12th May 2023 10:53 PM | Last Updated : 12th May 2023 10:53 PM | அ+அ அ- |

திருப்பூா் பாண்டியன் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத்துக்கு, எழுத்தாளா் சுப்ரபாரதிமணியன் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
திருப்பூா் பாண்டியன் நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது. ஆனால், இந்த சுகாதார நிலையம் திறக்கப்படததால் இப்பகுதி மக்கள் பல கிலோ மீட்டா் தொலைவில் உள்ள நெருப்பெரிச்சலுக்கு செல்ல வேண்டியுள்ளது. இப் பகுதியில் விளிம்பு நிலை மக்கள் அதிக அளவில் உள்ளனா். ஆகவே, பாண்டியன் நகா் ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது